பத்து லட்சத்தில் ஒன்று Los Angeles, California USA 65-0424 1சகோதரன் (Shakarian) ஷக்காரியன், உங்களுக்கு நன்றி. காலை வணக்கம், நண்பர்களே . இந்த மகத்தான கூட்டத்திற்கு முன்னதாகவே இந்தக் காலை மீண்டுமாக இங்கே லாஸ் ஏஞ்சல்ஸில் இருப்பது நிச்சயமாகவே நன்மையாய் உள்ளது, வருகின்ற இந்த வாரக் கூட்டம் எம்பஸி உணவு விடுதியில் (Embassy Hotel) இருக்கும். நான் உங்கள் யாவரையும் அங்கு காண எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாம் யாவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை சந்திக்கவும், அங்கு அவரைக் காணும்படியான ஒரு மகத்தான எதிர்பார்க்குதலின் கீழ் இருக்கிறோம். அவர் அங்கிருப்பதாக அவர் வாக்களித்தார். “இரண்டு பேராவது மூன்று பேராவது எங்கே கூடியிருக்கிறார்களோ,” அங்கே அவர் இருப்பார். ஜனங்கள் எல்லோரும் சிற்றுண்டிக்காகவும், உரையாடுவதற்காக வும் மகத்தான எதிர்பார்த்தலோடு காத்துக்கொண்டிருந்தபோது, நான் இந்த அரங்கில் இங்கு படிகளில் மேலே வந்தபோது, இந்தக் காலையில் நான் அவரை சந்தித்தேன் என்ற நிச்சயமுடையவனாய் நான் இருக்கிறேன். இங்கு உங்களோடு கூடியிருப்பதும், வானொலியில் கேட்கின்ற கூட்டத்தாரோடிருப்பதும் நன்மையாக இருக்கிறது. இங்கு அநேகர் இருக்கின்றனர், அவர்கள் ஒரு சிலரிடத்தில் பேசுவதற்கு அடுத்த தளத்திற்கு கீழே செல்ல வேண்டியதாயிருந்தது. அநேக வேண்டுகோள் களையும், இருதயக்கோளாறுகளையும் மற்றும் அவர்களுடைய சரீரங்களின் வித்தியாசமான நோய்களையும் கண்டேன். இப்பொழுது நாம் இங்கு வியாதியஸ்தருக்காகவும், அவதியுறுவோருக்காகவும் ஜெபிக்க விருக்கிறோம். 2நான் படிகளின் மேலே சென்றபோது ......... இப்பொழுது நான் அந்த வயோதிப பெருங்குடி மனிதரையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன். அவர் மேலே என்னிடம் வந்து, ''சகோதரன் பிரான்ஹாம், அநேக ஆண்டுகளுக்கு முன் .........“ என்றார். அவருக்கு மிக மோசமான இருதயக்கோளாறு இருந்ததாக அவர் கூறினார். அவர் மரிக்கப்போவதாக இருந்ததாக அவர்கள் நினைத்தார்களாம். அவருக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டதாம், தேவனுடைய கிருபை அவரை சுகப்படுத்தியதாம். இந்தக் காலையில் இங்கு அவர் தன்னுடைய எண்பதாவது வயதை தாண்டியவராய், அப்படியே களிகூர்ந்து கொண்டிருக்கிறார். ஆகையால் அது நமக்கு ஒரு புதிய உறுதியைப் பற்றிக் கொள்ளச் செய்கிறது. இப்பொழுது, இங்குள்ளது போன்றே, வெளியே தேசத்தில் வானொலியில் கேட்டுக்கொண்டிருக்கிற ஜனங்களின் விண்ணப்பங் களுக்காகவும் நான் நிச்சயமாகவே மன்றாடிக் கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கூட்டத்தை விட்டுச் சென்ற பிறகு, நான் ஐரோப்பாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் மற்றும் சுற்றிலுமுள்ள கூட்டங்களுக்கும் செல்கிறேன். இது ஒரு தரிசனத்தால் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே அது ஒரு மகத்தான கூட்டமாய் அங்கிருக்கப் போகிறது என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். நான் திரும்ப வரவேண்டுமென்று கர்த்தர் விருப்பங்கொண்டிருக்கிறார் என்பதை நான் அநேக வருடங்களாகவே உணர்ந்தேன். அவர் எனக்கு சிறிய தாழ்மையான, தாழ்மையான ஊழியத்தைக் கொடுத்தார். அதே சமயத்தில் அவர் அதினால் முழுமையாக அங்கே முடிவு உண்டாக்கிவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. சுவிசேஷ வலையில் நான் பிடிக்கக்கூடிய ஒரு ஆத்துமா எங்கோயிருப்பது போன்று தோன்றினது, அந்த ஒன்றிற்கென்றே அவர் தெய்வீக சுகமளித்தலின் வழியில், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஜனங்களிடத்தில் வீசும்படியான பெரிய பார வீச்சிழுப்பு வலையை என்னிடம் கொடுத்திருக்கிறார். நான் நிச்சயமாகவே உங்களுடைய விண்ணப்பங்களுக்காகவும், இங்குள்ள ஜனங்களாகிய உங்களுக்கும், வெளியே வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கிற உங்கள் இருவருடைய விண்ணப்பங்களுக்காகவும் நிச்சயமாக மன்றாடுகிறேன். 3இப்பொழுது எனக்கு ஒரு பொருளை எடுத்துப் பிரசங்கிக்க நேரமில்லை , இந்த அரங்கத்தில் ....... நான் இங்கு ஒரு சில நிமிடங்கள் கழித்து, அறிமுகப்படுத்திக்கொள்ளும்படியாய் ஒரு சில விநாடிகள் பேச எதிர்பார்க்கிறேன். தேசத்திற்கு வெளியே உள்ள ஜனங்களுக்கும், அங்கு வெளியே தூரமாய் இருப்பவர்களுக்கும் கூட நான் ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்ளப்போகிறேன். நான் இதற்கு முன்பு ஒருபோதும் சந்தித்திராத இந்தப் புதிய நண்பர்கள் யாவரையும் சந்திப்பதற்கும், இந்தக் காலையில் அவர்களோடு தொடர்புகொள்ளும்படியாய் வந்தமைக்காகவும் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். நாம் மற்ற இடங்களில் உள்ள ஆராதனைகளில் மகத்தான நேரங்களை அனுபவித்துக்கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது மிகுந்த பணியின் காரணமாக நான் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியவில்லை. நாம் ஜெபர்சன்வில், இன்டியானா மற்றும் டூசான், அரிசோனாவிற்கு இடையேயான பாதையை அதிகமான போக்குவரத்துடையாகவே வைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கர்த்தருடைய தரிசனத்தால் நாங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்தோம், அதாவது நாங்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டோம், நான் எங்கே சென்றுகொண்டிருக்கிறேன் என்பதையும் கூட அறியாதிருந்தேன். கிளிஃப்டனில் (Clifton) இங்குள்ள உங்களில் அநேகரிடத்தில், நான் பீனிக்ஸ் கூட்டத்தை விட்டுச் செல்லும் முன்பு, நேரிட்ட அந்த தரிசனத்தைக் குறித்து நான் உங்களிடம் ஒரு சிறு உரையாற்றினேன். நான் ஏழு தூதர்களை ஒரு கூட்டமாகக் கண்டேன். 4வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கிற கூட்டத்தாராகிய உங்களில் அநேகர் ஒருவேளை முழு சுவிசேஷத்தில் இல்லாமலிருக்கலாம்; இது உங்களுக்கு சற்று விளங்காத்தாய் தோன்றலாம் என்பதை நான் அறிவேன். அது எனக்கு, ஆனால் அங்கே ........ எவரேனும் ஒருவர் விளக்கிக் கூற முடிந்த ஏதாவது ஒன்றை, நீங்கள் அதை ஒருபோதும் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நாம் விளக்கிக்கூற முடியாத காரியங்களை நாம் விசுவாசத்தினால் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் தேவனை விளக்க முடியாது. எந்த மனிதனுமே தேவனை விளக்க முடியாது. அவர் சர்வ அதிகாரமும் பெற்றவராய் இருக்கிறார், அவர் மகத்துவமானவரும், வல்லமையுள்ளவருமாயிருக்கிறார். அவர் இங்கிருக்கிறார் என்று நாம் அறிந்துள்ள காரணத்தால், நாம் அப்படியே நாம் அப்படியே அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆகையால் நம்முடைய விசுவாசத்தினால் அதை ஏற்றுக் கொள்கிறோம். அவர் நமக்கு திரும்ப பதிலை, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு வருகிறார். நான் இங்கு இன்னும் சற்று நேரத்தில், “தேவனுடைய வழி, ஒரு ஆராதனை ஸ்தலம் என்பதைக் குறித்து உங்களிடம் பேசப்போகிறேன். அந்த ஒரே இடத்தில் மட்டுமே நீங்கள் அவரை ஆராதிக்க முடியும். அந்த ஒரே இடத்தில் மட்டுமே அவர் உங்களை எப்போதும் சந்திப்பார், அங்கேதான் ....... ஒரே சபையும், ஒரே இடமும், ஒரே நேரமும், ஒரே ஜனமும்தான் உண்டு. அதில் எல்லோரையும் தேவன் சந்திக்கிறார். இங்கு கர்த்தர் இந்தச் செய்தியை உங்களுடைய இருதயங்களில் ஆசீர்வதிக்கிறார் என்று நான் நம்புகிறேன். 5இப்பொழுது டூசானுக்கு வந்ததும், அந்த தரிசனங்களை கர்த்தருடைய நாமத்தில் உங்களிடத்தில் பேசினதும் எதிர்பாராததாய் இருந்தது. அவைகளை எந்த நேரத்திலும் ஞாபகப்படுத்த முடிந்தால், எவராயினும் ஒருவர் அதைக் கேட்டால், நான் அவைகளில் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும் என்ற காரணத்தினால் அல்ல, அதாவது அவர் கூறின் எந்தக் காரியமும் சத்தியமாகவே இருந்தது. அது, சம்பவிக்கும் என்று அவர் கூறுகிற விதமாகவே அது எப்பொழுதும் சம்பவிக்கிறது. அவர் இந்தக் கடைசி நாட்களில் இந்த மாதிரியான ஊழியத்தில் வேத வாக்கியங்களின்படியாய் நம்மிடத்தில் திரும்ப வரவேண்டியவரா யிருக்கிறார். அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அந்நிய பாஷைகளில் பேசுதல், தெய்வீக சுகமளித்தல் போன்ற இந்தக் காரியங்களின்படியாய் இருக்கும். இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருப்பது என்னவென்றால், பெந்தேகோஸ்தே செய்தியின் முடிவைக் குறித்ததாகும். கிறிஸ்துவினுடைய இந்த ஊழியத்தில் அவர்தாமே தம்முடைய ஜனங்கள் மத்தியில் அவர் பூமியின் மேலிருந்தபோது அவர் செய்த அதே காரியங்களோடு உருவகப்படுத்திக் காட்டினார்; மணவாட்டி அவருடைய சரீரத்தில் அவருடைய பாகமாயிருந்து அதே காரியங்களைச் செய்கிறாள், விவாக ஒப்புமைக்குரிய நடைமுறைக்கு முன்னதாக கணவனும் மனைவியும் போன்று அல்லது இராஜாவும் இராணியும் போன்றேயுள்ளது. 6இந்த வாரம் கர்த்தருக்குச் சித்தமானால், நான் இங்கே எம்பஸி உணவு விடுதியிலுள்ள நம்முடைய கூட்டத்தில் அதன் பேரில் சிலவற்றைப் பேச விரும்புகிறேன், என்னுடைய தாழ்மையான விதத்தில் அதை தெரிவிக்க விரும்புகிறேன். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற காலத்திலும், வேளையிலும் ஒரு நபர் எந்த வழியில் செல்ல வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் அல்லது எப்படி திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் அறியவில்லையென்றால், நீங்கள் - நீங்கள் விசுவாசத்தினால் ஒருபோதும் நடந்து கொண்டிருக்கவில்லை; நீங்கள் வெறுமனே ஊகித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் உத்தேசம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஊகித்தல் என்பது அதிகாரப்பூர்வமான ஆணை யுரிமையில்லாத அச்சாரம்“ என்பதாகும். ஆகையால் நாம் இந்த வேளை யில் என்ன சம்பவிக்கும் என்று தேவன் கூறினார் என்பதை அறிந்து கொள்வதற்கான உண்மையான அதிகாரப்பூர்வமான ஆணையுரிமையை பெற்றிருக்கவில்லையென்றால், எப்படி நாம் இந்த வேளையை சந்திக்கப் போகிறோம்? நாம் அதை சந்தித்தாக வேண்டும். விசுவாசத்தினால் அவருடைய வார்த்தையில், இப்பொழுது சம்பவிக்க வேண்டியதாய் கருதப்படுகின்ற காரியங்களை அறிந்து கொள்கிறோம்; தேசங்களின் நிலைமை, ஜனங்களின் நிலைமை, சபையின் நிலைமை முதலியவற்றை அறிந்துகொள்கிறோம். நாம் அதை அறிந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை சந்திக்க எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வில்லையென்றால், தற்செயலான நிகழ்ச்சி என்று நாம் வழக்கமாக அழைக்கும் விதமாகவே உங்களுக்கு வெறுமனே இருக்கும்; வெறுமனே உள்ளே குதித்தல், அது இங்கே இருக்கும் என்று நம்புதல், இதை நம்புதல், அதை நம்புதல் மற்றும் “இது இருக்குமோ”? என்பது போன்றே இருப்பீர்கள். ஆனால் நாம் அதைச் செய்யும்படியாய் தேவன் விரும்புகிற தில்லை, அவர் இந்த நாளைக் குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளவே விரும்புகிறார். ஆகையால் விசுவாசத்தினால் அதை சந்திக்கிறோம். ஏனென்றால் அது அந்த விதமாய் இருக்கும் என்று அவர் கூறினார். ஆகையால் அப்பொழுது நீங்கள் சத்தியமா யிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம். ஏனெனில் நீங்கள் அதற்காக ஏதோ ஒரு நபருடைய வார்த்தையை பெற்றிருக்க வில்லை; நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அவருடைய வார்த்தையையே நீங்கள் பெற்றுள்ளீர்கள். நம்முடைய பரலோக பிதா இந்த வாரம் இதை நமக்கு அருளுவார் என்று நாம் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். 7இப்பொழுது நான் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு டூசோனுக்கு வந்ததைக் குறித்து கூறிக்கொண்டிருந்ததை நிறுத்திக்கொண்டதற்காக நான் வருந்துகிறேன். அது என்னுடைய ஜீவியத்தின் முடிவு என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். வீட்டில் சுமார் பத்து மணியளவில், அந்தக் காலை அந்த தரிசனத்தில் சம்பவித்ததான அந்த அதிர்ச்சி யான நிலையில் எவருமே ஒருபோதும் நிற்கமுடியாதென்றும், அதற்குப் பின்னர் ஒருபோதும் ஜீவிக்கவே முடியாது என்றும் நான் நினைத்தேன். ஏன், நான் என்னுடைய மகனோடு சில ஏற்பாடுகளை செய்யவே டூசானுக்கு வந்தேன். ஏனென்றால் நான் சென்றுவிட்ட பிறகு என்னுடைய மனைவியும், பிள்ளைகளும் அவனோடிருப்பதற்காகவே, காரணம் நான் அது என்னுடைய முடிவு என்று எண்ணிக்கொண்டேன். அது சம்பவிப்பதற்கு முன்னர் நான் பீனிக்ஸ் கூட்டங்களில் ஒரு மனிதனிடம் கூறினேன், அது எப்படி சம்பவிக்கும் என்று நான் உங்களிடமும் கூறினேன். நல்லது, நான் ஒரு சில மாதங்கள் கழித்து, ஒருநாள் காலை சரியாக டூசானுக்கு வடக்கேயிருக்கிற சபினோ கான்யான் (Sabino Canyon) மலையின் மேல் இருந்தேன். நான் அங்கு ஜெபிக்கும்படியாய் மேலே இருந்தேன். நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில், நான் என்னுடைய கரத்தை ஆகாயத்தில் உயர்த்தினவாறு, “பிதாவே, இப்பொழுது நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற இந்த வேளைக்காக, நீர் எப்படியாவது எனக்கு உதவி செய்யும், என்னை பெலப்படுத்தும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். என்னுடைய பணி இங்கே பூமியின் மேல் முடிவுற்றுவிட்டால், அப்பொழுது நான் உம்மிடம் வரவேண்டும். நான் வருவதற்கு வருந்தவில்லை. ஆனால் நீர் என்னுடைய குடும்பத்திற்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வீர் என்று நான் அறிவேன். இந்த வேளைக்காக பலப்படுத்தும்படியாகவே நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினேன். ஏதோ ஒன்று என்னுடைய கரத்தில் விசையுடன் வந்து விழுந்தது! 8இப்பொழுது வானொலியில் கேட்போரே, நான் கூறினது விசித்திரமானதாக தென்படலாம். ஆனால் இது உண்மையாய் இருக்கிறது. தேவனே என்னுடைய நியாயாதிபதியாய் இருக்கிறார். நான் என்னுடைய கரத்தில் ஒரு பட்டயம் இருந்ததையும், அதன் கைப்பிடி பாகத்திற்கு மேலே ஒரு உறை இருந்ததையும் கண்டேன். கைப்பிடியானது முத்துக்களால் செய்யப்பட்டதாயும், அந்தக் கைப்பிடி பாகத்திற்கு மேலோ பாதுகாப்பிற்கான ஒருவிதமான பொன்னைப் போல காணப்பட்டது. அந்த கத்தியானது, சரியாகச் சொல்லப்போனால் ஒருவிதமாய் பளபளப்பாய் காணப்பட்டது. ஓ, ஏதோ ஒரு மஞ்சள் வண்ணமாக அல்லது ஏதோ ஒன்று சூரியனில் மின்னுவது போன்று காணப்பட்டது. இப்பொழுது, அது மலையுச்சியின் மேல் காலையில் சுமார் பத்து இல்லை பதினொரு மணியாய் இருந்தது. ஒரு நபர் ஜனங்களுக்கு அநேக மைல்கள் தொலைவில், ஒன்றுமேயில்லாத இடத்தில் ஒரு பட்டயத்தோடு அங்கே நின்று கொண்டிருந்தால் எப்படி உணருவான் என்பதை நீங்கள் யூகித்துப் பார்க்க முடியும். உங்களுடைய கரத்தில் பிடித்துக்கொண்டிருந்தால் எப்படி உணருவீர்கள் என்பதை நீங்கள் யூகித்துப் பார்க்கமுடியும். (அதாவது நான் என்னுடைய சுயசிந்தனையில் இருக்கிறேன் என்று நான் உணருகிறேன்) நான் அதை தொட்டுப் பார்த்து, பற்றிப்பிடித்து அதை முன்னும் பின்னுமாக ஆட்டினேன், ஏன், அது ஒரு பட்டயமாய் இருந்தது. 9நான் சுற்றிலும் நோக்கிப் பார்த்தேன். நான், ''நல்லது, இப்பொழுதோ, அது எப்படி சம்பவித்திருக்கக்கூடும்? இதோ நான் இங்கே சரியாக, இங்கேயே நின்று கொண்டிருக்கிறேனே, அநேக மைல்களைச் சுற்றிலுமே ஒருவரும் இல்லையே, அது எங்கிருந்து வந்தது“ என்றேன். நான், 'நல்லது ஒருகால் இது என்னுடைய முடிவின் நேரமாக இருக்கிற தென்று கர்த்தர் என்னிடம் கூறிக்கொண்டிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்” என்றேன். அப்பொழுது ஒரு சத்தம் பேசி, “இது கர்த்தருடைய பட்டயம்” என்றது. நான், ''நல்லது, ஒரு பட்டயம், அப்படியானால் அது ஒரு இராஜாவிற்குரியது, வீரனுக்குரியது“ என்றே எண்ணினேன். அது இங்கிலாந்திலும் மற்றும் வித்தியாசமான இடங்களிலும் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். நான், ''அதனால் தான் அது வீரனுக்குரியதாயிற்றே” என்று எண்ணினேன். நான், “நல்லது, ஒருக்கால் நான் ஜனங்கள் மேலும் கரங்களை வைக்க வேண்டியவனாய் இருக்கலாம், அல்லது ........” என்று எண்ணினேன். நான் எல்லா இனத்தவர் மேலும் கரத்தை ........... மானிட சிந்தனை யாவுமே குழப்பமடையக்கூடும் என்று உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாது. நம்முடைய சிந்தனை வரையறைக்குட்பட்டதாயிருக்கிறது. அவருடையதோ வரையறையற்றதாய் இருக்கிறது. ஆகையால், நான் இருந்தது போல அது ........ அப்பொழுது அது என்னுடைய கரத்தை விட்டுச் சென்றபோது, அது எங்கே சென்றது என்பதையே நான் அறியவில்லை . அப்படியே மறைந்துவிட்டது. ஏன், ஒரு நபர் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சிறிதேனும் புரிந்து கொள்ளவில்லையென்றால், நீங்கள் நீங்கள் அப்படியே பைத்தியமாகிவிடுவீர்கள். நீங்கள் அங்கேயே நின்றுகொண்டு என்ன சம்பவித்தது என்று ஆச்சரியப்படுவீர்கள். மேலும் அவர், “தரிசனம் உன்னுடைய முடிவின் நேரத்தைப் பற்றியதல்ல. அது உன்னுடைய ஊழியத்திற்கானதாய் இருக்கிறது. அந்தப் பட்டயம் வார்த்தையாய் இருக்கிறது. ஏழு முத்திரைகளைக் குறித்த இரகசியங்கள் ...... திறக்கப்படும்” என்றார். 10அதன் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து இல்லை சரியாகக் கூறினால், இரண்டு மாதங்கள் கழித்து, அது சம்பவித்தபோது நான் ஒரு கூட்ட நண்பர்களோடு மலையின் மேல் இருந்தேன். நீங்கள் இங்கே நின்று கொண்டிருப்பது போல அவ்வளவு தெளிவாக ஏழு தூதர்கள் பரலோகத்திலிருந்து கீழே விரைந்து வந்தனர். மலைகளிலும், கீழே குன்றுகளிலும் கற்பாறைகள் உருண்டன, அங்கு நின்று கொண்டிருந்த ஜனங்களோ தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே யிருந்தனர், தூசியோ எங்கும் பறந்து கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி இருந்தபோது, அவர், ''உன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப் போ. இப்பொழுது ஏழு முத்திரைகளில் ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு தூதர்களாய் இருப்பார்கள்“ என்றார். அது ஒலிநாடாவில் இருக்கிறது. புத்தகமோ வெகு விரைவில் வெளி வரும். இப்பொழுது அது ஒருவிதமாக இலக்கணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்துள்ளது போல, என்னுடைய இலக்கணமானது மிக நன்றாயில்லை, ஜனங்கள் விரும்பமாட்டார்கள் ............ நீங்கள் என்னை நேசிக்கிறவர்களாகவும், என்னுடைய இலக்கணத்தில் என்னை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுகிற ஜனங்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் யாரோ ஒரு வேதாகம பேராசிரியர் அதை எனக்காக இலக்கணப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த எல்லாவற்றையும் எடுத்து ....... நல்லது, நான் அங்கே கூறின் வார்த்தை தவறாய் இருக்கலாம். எனக்கு தெரியவுங்கூட இல்லை. ஆகையால் நான் யாரோ ஒருவர் சிரிப்பதைக் கேட்கிறேன். ஆகையால் ''இலக்கணப்படுத்துதல்“ சரியல்ல என்று நான் யூகிக்கிறேன். ஆனால் ஆலந்து நாட்டுக்காரனைப் போன்று, நீங்கள் உண்மையிலேயே நான் என்ன கூறுகிறேன் என்பதையல்ல, நான் என்ன குறிப்பிடுகிறேன் என்பதையே எடுத்துக் கொள்ளுங்கள். 11இப்பொழுது இதற்கு இன்னும் மூன்று நிமிடங்கள்தான் உள்ளது. நான் நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளும்படியாய் கூறப்பட்டிருக்கிறேன். இப்பொழுது தேசத்திற்கு வெளியே வானொலியில் கேட்கிற அருமையான ஜனங்களாகிய நீங்களும், இங்கே கூட்டத்தில் தேவையாயும், வியாதியாயுமிருக்கிற நீங்களும், நாங்கள் இந்த வியாதியஸ்தருக்கான ஜெப வார்த்தையைக் கூறும்போது, நீங்கள் அப்படியே உங்களுடைய கரங்களை ஒருவர் மற்றவர் மீது இப்பொழுது வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, இயேசு, சபைக்கு தம்முடைய கடைசி கட்டளையாக, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன”: “அவர்களை”, விசுவாசிக்கிறவர்களால்! அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதிஸ்தர்மேல் வைப்பார்களேயானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்“ என்றார். 12அன்புள்ள பரலோகப் பிதாவே, இன்றைக்கு நாங்கள் பிள்ளைகளைப் போன்றிருக்கிறோம், நீர் செய்யும்படி கூறினதற்கு நாங்கள் கீழ்ப்படிந்து கொண்டிருக்கிறோம். இந்த எல்லா தொலைபேசி வேண்டுகோள்களின் மீதும் நாங்கள் கரங்களை வைத்துக் கொண்டிருக்கிறோம். அங்கே தேசத்திற்கு வெளியேயுள்ளவர்களை நீர் காண்கிறீர், அவர்கள் எப்படி தேவையுள்ளவர்களாய் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே தேவையாயும், அவதியுற்றுக் கொண்டுமிருக்கிறவர்களை நீர் காண்கிறீர். அன்புள்ள தேவனே, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதிஸ்தர்மேல் வைப்பார்களேயானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று நீர் உரைத்திருக்கிற உம்முடைய வார்த்தையில் உள்ள இந்த விசுவாசத்தினால், நாங்கள் அவர்களை உம்மிடத்தில் சமர்ப்பித்துக்கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை அருளும். ஆமென். (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.] [சகோதரன் பிரான்ஹாம் முதல் வானொலி ஒலிபரப்பை முடிக்கிறார் - ஆசி.) 13சகோதரன் ஷக்காரியன், உங்களுக்கு நன்றி. இங்கிருப்பது போலவே, வெளியே தேசத்தில் வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கிற நம்முடைய சில நண்பர்களிடத்தில் உரையாட, மீண்டுமாய் திரும்பவும் இந்த ஒலிபரப்பில் இருப்பது நிச்சயமாகவே ஒரு பெரிய சிலாக்கியமாய் இருக்கிறது. நாளை பிற்பகல் எம்பஸி உணவு விடுதியில் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்கு வரும்படியாக, நாங்கள் இந்த அழைப்பை நிச்சயமாகவே உங்களுக்கு விரிவாக்கிக் கொள்கிறோம். அது மட்டுமல்ல, ஆனால் பாவியாய் இருக்கிறவர்களையும், சீர்கெட்டுப்போனவர்களையும் கொண்டு வாருங்கள். நாம் வியாதியஸ்தருக்குக்கான ஜெபத்தை ஏறெடுப்போமானால், அப்பொழுது நாம் தேவன் தொடர்ந்து மகத்தான அற்புதங்களை செய்கிறதைக் காணலாம். ஆனால் அது இரண்டாந்தர மாயிருக்கிறது. முக்கியமான காரியம் இரட்சிக்கப்படுவதும், தேவனுடைய ஆவியினால் நிரப்பப்படுவதுமாய் இருக்கிறது. நான் இங்கு இன்னும் ஒரு சில நிமிடங்களில், நாம் எப்படி தேவனுடைய ஆவியினால் போதுமான அளவு நிரப்பப்பட வேண்டும் என்பதைக் குறித்து உங்களிடம் உரையாடப் போகிறேன். 14வழக்கமாகவே தெய்வீக சுகமளித்தல் ஜனங்களுடைய கவனத்தை இழுத்து, அவர்களை தேவனுடைய சமூகத்திற்குள் கொண்டு வருகிறது. அவர்கள் அறிந்திருக்கிற ஏதோ ஒன்றை தேவன் செய்கின்றபோது, அது புரிந்து கொள்ளப்படுகிறதில்லை. நாம் அது எப்படி செய்யப்படுகின்றது என்பதை இயலியக்கவாத முறையில் விளக்கிக் காட்ட முடியாது. தேவன் அதை தம்முடைய சொந்த மகத்தான வழியில் செய்கிறார். ஆகையால் அது எங்கோ ஒரு வல்லமையின் பிரசன்னம் ஒன்று உண்டென்பதை அறிந்து கொள்ளும்படியாக ஜனங்களின் கவனத்தைக் கவர்ந்திழுக்கிறது. அது மானிட அறிவிற்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது. அது தேவ ஆட்டுக்குட்டியை நோக்கிப் பார்க்கும்படி அவர்களைத் தூண்டுகிறது. எப்பொழுதுமே தெய்வீக சுகமளித்தல்; நான் கூறியிருக்கிறேன், நான் சுமார் அறுபதுக்கு இடைப்பட்ட, ஒருக்கால் எழுபது சதவீதம் நம்முடைய கர்த்தருடைய ஊழியத்தில் தெய்வீக சுகமளித்தல் இருந்தது என்று நம்புகிறேன். அவர் ஜனங்களை கவர்ந்திழுக்க அதைச் செய்தார். அதன்பின்பு, அவர் அங்கிருந்தபோது, அவர், ''நானே அவர் என்று நீங்கள் விசுவாசியா விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்“ என்றார். 15இப்பொழுது, தெய்வீக சுகமளித்தல் கர்த்தராகிய இயேசுவை ஜனங்கள் நோக்கிப் பார்க்கும்படி செய்கிற ஒரு பெரிய வரைபட அட்டையாய் இருக்கிறது. திருமறை வல்லுனர் F.F. பாஸ்வர்த், உங்களில் அநேகருக்கு ஒரு நண்பனாய் இருந்தவர், அவரை அறிந்திருக்கிறீர்கள். ஒரு வாலிபமான ஊழியக்காரனாய் இருந்த காரணத்தால் அவருடைய ஊழியமானது எனக்கு மேலானதாக கருதப்பட்டது. நான் என்னுடைய கூட்டங்களின் தொடக்கத்தில் நான் சகோதரன் பாஸ்வர்த்தோடு ஒன்றுபட்டு இணைந்திருந்தேன். அவர் வழக்கமாகக் கூறுவது, “தெய்வீக சுகமளித்தல்”, இப்பொழுது இது ஒரு கரடுமுரடான சிறு கூற்றாய் இருக்கிறது, அவர், “தெய்வீக சுகமளித்தல் என்பது ஒரு தூண்டில் முள்ளின் மேலிருக்கும் இரையாய் இருக்கிறது” என்றார். ''நீங்கள் ஒருபோதும் மீனிடம் தூண்டில் முள்ளைக் காட்டாதீர்கள், நீங்கள் தூண்டில் இரையைக் காட்டுங்கள், அப்பொழுது அது இரையை நாடிப் பிடிக்கையில் தூண்டில் மேல் சிக்கிக் கொள்ளும்“ என்றார். ஆகையால் அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்கிறோம். அதுவே நம்முடைய ...... நாம் ........ ஜனங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு சென்று சேர்ப்பதே நம்முடைய குறிக்கோளாய் இருக்கிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எனவே அவர் சென்ற நாட்களில் சுகமளிப்பவராய் இருந்திருந்தால், அவர் இன்றைக்கும் சுகமளிப்பவராகவே இருக்கிறார். 16நான் வெளி யே தேசத்தில் வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கிற வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் முன்னதாக ஒரு தனிப்பட்ட சாட்சி. ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் ஒரு மலையின் மேல் உட்கார்ந்துகொண்டிருந்தேன். அங்கே பதினைந்து அல்லது இருபது சகோதரர்களுக்கு முன்பாக அங்கே ஒரு மகத்தான காரியம் சம்பவித்தது. அங்கே கர்த்தருடைய தூதன் மிகத் தாழ இறங்கி வந்தார். பெரிய வெளிச்சம் ஒரு வால் நட்சத்திரத்தைப் போன்று பறந்து கொண்டு மலைகளினூடாக சுற்றிலுமாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது. கற்பாறைகளோ, இருநூறு அடி அல்லது அதற்கும் மேலாக பூமியிலிருந்து பறந்து கொண்டிருந்தன, மரங்களின் உச்சியோ சுழற்றியடிக்கப்பட்டன. நானோ அதற்குக் கீழே சரியாக நின்று கொண்டிருந்தேன், அது அங்கே சம்பவிக்கும் என்றும், என்ன சம்பவிக்கும் என்றும், அது சம்பவித்ததற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு அப்படியே அவர்களிடம் கூறினேன்; அதற்கு முன்தினமே அது வெளிப்படையாகக் கூறப்பட்டது. இந்த மனிதர்கள் யாவரும் பாராக்கட்டை வண்டிகளின் கீழே ஓடிவிட்டனர், மற்றும் ஒவ்வொன்றுமே தப்பியோட முயற்சித்துக்கொண்டிருந்தன. அவர்கள் என்ன சம்பவித்திருந்தது என்பதை அறிந்துகொள்ளவில்லை. அவர் பேசி, பின்னர் உடனடியாக என்ன சம்பவிக்கும் என்பதையும் கூறினார். 17அங்கு இந்த குறிப்பிட்ட கற்பாறையின் மேல் உட்கார்ந்திருந்தேன். அங்கேயே அவர் காட்சியளித்தார். நானோ மினிஸோட்டாவிலிருந்து (Minnesota) வந்து, எங்களோடிருந்த ஒரு நண்பனோடு இருந்தேன். அவருடைய ஜனங்கள் இந்தக் காலை இங்கிருக்கிறார்கள், நான் உறுதியாய் கூறவில்லை, ஆனால் மற்ற தளங்கள் ஏதோ ஒன்றில் அவர் இங்கிருக்கலாம். அது டோனோவான் வீட்ஸ் (Donavon Weerts) ஆக இருந்தது, ஒரு அருமையான வாலிப நபர், தன்னுடைய ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு ஒப்புவித்து, ஆவியினால் நிரப்பப்பட்டிருந்த ஒரு லூத்தரன், மிகவும் தாழ்மையான ஜெர்மானிய பையன், சுமார் 30 வயதுடையவன், குடும்பமோ இரண்டு அல்லது மூன்று சிறிய பிள்ளைகளைக் கொண்டதாய் இருந்தது. அவர் வெறுமனே என்னுடைய அண்டை வீட்டாராயிருப்பதற்காகவே டூசோனுக்கு இடம் பெயர்ந்து வந்தார். அங்கே முன்னூறு அல்லது நானூறு பேர் அருகிலிருப்பதற்காகவே இடம் பெயர்ந்து வந்திருந்தனர். ஆகையால் அவன் .......... நான் அதைப் போன்று அப்படிப்பட்ட அக்கம்பக்கமாயிருப்பவர்கள் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கும், மற்றும் சுற்றிலுமுள்ள எல்லா இடங்களுக்கும் வெறுமனே அருகில் இருக்கவே, பாருங்கள் ........... என்னோடு, என்னோடிருக்கவும், கர்த்தருடைய இன்பங்களை அனுபவித்து மகிழவுமே வழி முழுவதும் என்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தாழ்மையான நபர், நான் ஒருபோதும் அவனிடம் மிக அதிகமாக அக்கறை காட்டினதில்லை . 18உண்மையிலேயே, நான் அறிந்துள்ள ஜனங்கள், என்னுடைய சொந்த சகோதர, சகோதரிகளைப் போல சகவாசம் செய்கிறார்கள். நான் அவர்களை கவனிக்கிறேன். அவர்கள் ஒழுங்கு முறையிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைப்பதாக உணர்ந்தால், அவர்களை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று அவர்களோடு பேசுவேன், ஏனென்றால் நான் அவர்களை நேசிக்கிறேன். நாம் மகிமையில் ஒன்றாக ஜீவிக்க விரும்புகிறோம். கூட்டங்களில் சில நேரங்களில் நான் உங்களிடம் கடுமையாக பேசுகிறதாய் நீங்கள் நினைக்கலாம். அது இதனால் அல்ல. அது நான் உங்களை நேசிக்கவில்லை என்ற காரணத் தால் அல்ல, ஆனால் அது என்னுடைய இருதயத்திலிருந்து வருகிறது. ஏனென்றால் நான் - நான் .... அது சரியாக ஒரே வழியாய் இருக்க வேண்டும். தேவனை சேவிக்க ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு. அது ........ நாம் அவருடைய வழியில் தரித்திருக்க வேண்டும், நம்முடைய சிந்தனைகள் என்னவாய் இருந்தாலும் கவலையில்லை. அவருடைய வழியிலேயே! 19நான் டோனோவானைக் (Donavon) கவனித்தேன். அவனுடைய வலது காதின் நுனிப்பகுதியானது அநேகமாக அதனுடைய அளவைப் போன்று மூன்று மடங்கு வீங்கினதாய் மிகவும் சிவந்து காணப்பட்டது. மேலும் ஒருக்கால் நாங்கள் ஒரு சில நாட்களாக பாலைவனத்தில் இருந்ததினால், அவனுடைய காதில் ஒரு சில கற்றாழைகள் உரசினதால், அது அவனுக்கு உண்டாயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்தபோது, அது ஒரு புற்று நோயாய் இருந்தது என்பதை நான் கண்டறிந்தேன். எனவே நான் டோனோவானிடம் கூறினேன், நான், “டோனோவான் உமக்கு உம்முடைய காதில் அது எவ்வளவு நாட்களாக இருந்து வருகிறது?” என்றேன். எனக்குத் தெரியாமல் வெறுமனே ஒருவிதமாய் அவனிடமே கேட்டறிந்து கொள்வது போன்றே, நான், ''டோனோவான், எவ்வளவு நாட்களாக அது அங்கே இருந்து வருகிறது?“ என்றேன். அவன், “சகோதரன் பிரான்ஹாம் சுமார் ஆறு மாதங்களாகவே” என்றான், அவனே கூறினான். நான், ''நீ ஏன் அதை என்னிடம் கூறவில்லை ?“ என்றேன். அவன், “ஓ, பார்த்தால் நீரோ மிகவும் வேலையாயிருக்கிறீர்” என்ற கூறி, ''நான் அதைக் கூற விரும்பவில்லை “ என்றான். மேலும் ஒருக்கால் எப்பொழுதாவது கர்த்தர் அதை உம்மிடம் கூறலாம் என்று நான் நினைத்தேன்” என்றான். எனவே நான், ''அது என்ன வென்று நீ தெளிவாக அறிந்திருக்கிறாயா?“ என்றேன். அவன், “எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு” என்றான். நான், “அது உண்மை ” என்றேன். இரண்டாம் நாள் காலை, அந்தப் பையனை கரத்தால் பற்றிப் பிடித்ததினால், அது மறைந்தே போய் விட்டிருந்தது; இரண்டாம் நாள் காலையில் அவனுடைய காதில் ஒரு வாட்டம் கூட இல்லாமற் போயிற்று. அது முழுவதுமே முழுமையாக மறைந்தே போய்விட்டிருந்தது. 20எனவே நாம், அநேக நேரங்களில் இதைப் பெற, அதைப் பெற முயற்சி செய்யும்படி அவசரப்படுகிறோம். அதாவது ......... பாருங்கள், இது, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன்” என்பதாய் இருக்கிறது. அது, ''அவர்கள் வியாதிஸ்தருக்காக ஜெபிப்பார்களே யானால்“ என்று கூறவில்லை. ”வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார் களேயானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்பதே!“. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் நாமே விசுவாசமுடைய வர்களாய் இருக்க வேண்டும் சரி. எனவே இப்பொழுது டோனோவான் அநேகமாக இங்கிருப்பான். நீங்கள் அவனை சந்திப்பீர்கள். அவன் இங்கிருப்பான். அவன் இந்தக் காலை இங்கே மற்ற தளங்கள் ஏதோ ஒன்றில் இருப்பான். நீங்கள் அவனை சந்திப்பீர்கள். அவன் அந்த சாட்சியை அறிந்து கொள்வான். நான் இன்னும் என்ன கூறமுடியும்? நான் லூக்கா அல்லது யோவான், யாரோ ஒருவர் உலகம் கொள்ளாது என்று கூறினார் என்று நம்புகிறேன்....... , அவர் இந்த கடைசி நாட்களில் ஜனங்கள் மத்தியில் என்ன செய்திருக்கின்றார் என்பதைக் குறித்து எழுதக்கூடிய புத்தகங்களை இந்த உலகம் கொள்ளாது; எத்தனையோ வியாதிஸ்தர் சுகமாக்கப்பட்டிருக்கின்றனர், மட்டு மீறிய குடி வெறியர்கள் விடுவிக்கப் பட்டனர், அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விடுவிக்கப்பட்டனர். எல்லா வகையான நோய்களிலிருந்தும், தொந்தரவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். 21இப்பொழுது இங்குள்ளது போல், நீங்கள் வெளியே வானொலியில் கேட்கிறீர்கள். நான் இப்பொழுது இந்த காலையில் தொலைபேசி மூலமாக வந்திருக்கின்ற அதிக எண்ணிக்கை கொண்ட வேண்டுகோள்களை இங்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் இங்கிருந்தது முதற்கொண்டே இடைவிடாமல் மணி ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஆகையால் நாங்கள் ......... நாங்கள் இங்கிருந்தது முதற்கொண்டு நூற்று தொண்ணூற்றாறு வேண்டுகோள்கள் தொலைபேசியின் மூலம் இந்தக் காலையில் வந்திருக்கின்றன. ஆகையால் இப்பொழுது நாம் ஜெபத்தில் ஒவ்வொருவரும் சேர்ந்திருப்போமாக................. நீங்கள் தேசத்திற்கு வெளியில் எங்கேயிருந்தாலும், நீங்கள் விசுவாசிகளாயிருந்தால், உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். இல்லை யென்றால் நாங்கள் அங்கும் இங்குமாக ஜெபிக்கையில், உங்களுடைய கரத்தை வேதாகமத்தின் மீது அல்லது அங்கிருக்கின்ற ஏதோ ஒன்றின் மீது வையுங்கள். அன்புள்ள பரலோகப் பிதாவே, இந்த டோனோவான் வீட்ஸின் சிறிய சாட்சியானது வெறுமனே ஆயிரங்களில் ஒன்றாகும். கர்த்தாவே, நீர் மிகுந்த கிருபையுள்ளவராக இருக்கிறீர் ....... நீர் இங்கிருக்கிற மற்றும் வானொலியில் கேட்கிற இவ்விரு ஜனங்களின் இருதயங்களையும் நோக்கிப் பாரும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் சுகமாக்கப்படுவார்களாக. பொல்லாங்கு அவர்களை விட்டு நீங்குவதாக, அவர்கள் தங்களுடைய எல்லா தொந்தரவுகளிலிருந்தும் விடுவிக்கப் படுவார்களாக. பிதாவே இதை அருளும். உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். “கர்த்தாவே, உமக்கு நன்றி ...... ” (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.) (சகோதரன் பிரான்ஹாம் இரண்டாவது வானொலி ஒலிபரப்பை முடிக்கிறார் - ஆசி.) 22நல்லது. இந்தக் காலையில் இந்த மூன்று அவகாசங்களுமே இங்கே எனக்காக இருக்கிறது. என்னே ! நாம் கிட்டத்தட்ட பன்னிரெண்டு, பதினான்கு நிமிடங்களில் அல்லது சற்று நிமிடத்தில் இந்தக் கட்டிடத்தை விட்டு காலிசெய்ய வேண்டும் என்று சற்று முன்பு கூறப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே மற்ற தளத்தில் இருப்பது யார் என்றும், அவர்களால் எந்த ஆகாரத்தையும் பரிமாற முடியவில்லை என்றும் மேலாண்மை கூறினது. நம்முடைய ஆகாரங்களோ நீண்டுவிட்டது. நமக்கு அநேக உணவு வகைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் நாம் இந்தக் காலையில் இங்கே இந்த அருமையான கூட்ட மனிதர்களோடு இருப்பதற்காகவும், நான் அதை ருசித்துப் புசிக்கின்ற குதூகலம் என்று அழைப்பது போன்றே இது மகத்தானதாய் ஆவிக்குரிய பிரகாரமாய் நமக்கு இருக்கிறது என்பதற்காகவும் நாம் மிக மிக மகிழ்ச்சியடைகிறோம். நாம் நாளை பிற்பகல் மீண்டுமாக எம்பஸி உணவு விடுதியிலே ஆராதனையில் இருப்போம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். இப்பொழுது நாம் அங்கே வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம் என்றும், தேவன் நம்மோடு தொடர்பு கொள்ளும் படியாயும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் என்னுடைய ஊழியத்தில், என்னுடைய பங்கைச் செய்யவும் (நம்மால் முடிந்த எல்லாவற்றையும்) செய்து, இந்தக் கூட்டத்திற்கு ஒரு வெற்றியை உண்டாக்கும்படியாக வந்திருக்கிறேன். இது நம்முடைய கூட்டமாயிருக்கின்ற காரணத்தால் ஒரு வெற்றி என்றில்லாமல், ஒரு வெற்றியுள்ள ஜனங்களாய் இயேசு கிறிஸ்துவை கண்டறியச் செய்வதே வெற்றியாகும். அதுவே வெற்றியாய் இருக்கிறது. எந்தக் கூட்டத்திலுமே, ஏதோ ஒன்று நிறைவேற்றப்பட்டு, சில ஆத்துமாக்கள் இராஜ்ஜியத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டுமே யொழிய, நாம் எவ்வளவாய் தேவனை துதிக்கிறோம் என்பதும், எவ்வளவு பெரிய காரியங்களை அவர் செய்ய நாம் காண்கிறோம் என்பதும், எத்தனை முறைகள் அவர் நம்மிடத்தில் ஆவியில் பேசுகிறார் என்பவைகள் முக்கியமானதல்லவே! 23இப்பொழுது சகோதரன் ஷக்காரியன் சற்றுமுன் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களைக் குறித்து அவர் என்ன நினைத்தார் என்பதைக் குறித்து சரியாக ஒரு உண்மையான உரையை நிகழ்த்தினார். நாம் சரியாக முடிவின் நேரத்தில், சரியாக ....... சரியாக சாயங்கால நிழல்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் உண்மையாகவே என்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். சூரியனோ மிகத் தூரமாக கடந்து சென்று விட்டது. காரியங்கள் சம்பவிக்கிற விதமாகவே இன்றைக்கு அவர்கள் இருக்கின்றதை நாம் காணும் பொழுது, ஏன், மற்றொரு சந்ததி என்னத்தைக் கொண்டு வரும் என்று கூறுவது கடினமாயிருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு ....... வெறுமனே நான் ஏதோ ஒன்றை சற்று உட்புறமாக உங்களுக்கு கொடுக்கட்டும். நான் வசிக்கிற அரிசோனா முழுவதிலுமுள்ள எல்லா பள்ளிகளிலுமே அவர்கள் ஒரு தேர்வாராய்ச்சியை நிகழ்த்தினர். அவர்கள் பிள்ளைகளுக்கு, அவர்களுக்குத் தெரியாமலேயே ஒரு மனநிலை பரிசோதனையை (Mental Test) கொடுத்தனர். என்னவென்று யூகித்தீர்களா? உயர்நிலைப் பள்ளிகளையும், இலக்கணப் பள்ளிக்கூடங் களையும் சேர்த்தே எண்பது சதவீதமான பிள்ளைகள் மனநிலை குறைபாட்டினால் துன்புற்றுக்கொண்டிருந்தார்களாம். அவர்களில் எழுபது சதவீதமானவர்கள் தொலைகாட்சியை கவனித்துப் பார்ப்பவர்களாய் இருந்தனராம். பாருங்கள், தீமைகள், அவைகள் அப்படியே நம்மீது மெதுவாக நுழைந்துவிட்டது. நாம் ......... அது ஏன் வருகிறது என்று நீங்கள் வியக்கிறீர்கள். தேவனுடைய சத்தம் அதற்கு எதிராக கூக்குரலிடுவதை உங்களால் கேட்கமுடிகிறது; இருந்தாலும் இங்கு நாம்நாம் நம்மையே அதற்குள்ளாக (Webbed) சிக்கவைத்துக் கொண்டோம் என்பதை கண்டறிகிறோம். 24நான் உங்களுக்கு ஏதோ ஒரு சிறு அதிர்ச்சியைக் கொடுக்கட்டும். பாருங்கள், ''என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே உள்ளே பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி : கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவர்கள் எல்லோரும் அதில் பிரவேசிப்பதில்லை''. அவருடைய சித்தம் அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. நாம் எப்போதுமே மிகவும் பயபக்தியுள்ளவர்களாய், மகத்தான தருணங்களை அனுபவிப்பவர்களாய், ஆரவாரமிடுபவர்களாய் இந்தக் கூட்டங்களில் குதிப்பவர்களாய் இருக்கக்கூடும். நாம் ......... நான் - நான் குற்றங் காண்கிறவனாய் இருக்க வேண்டுமென்று விரும்பவில்லை. ஆனால் நான் தேவனுக்கு செய்ய வேண்டிய ஒரு-ஒரு கடமையுண்டு, உத்தமமா யிருப்பதும், அவர் என்னிடம் என்ன கூற விரும்புகிறாரோ, அதை கூறுவதுமே அந்த கடமையாகும். என்னுடைய திட நம்பிக்கைகளில் என்னோடு உடனீடுபாடு கொண்டிருக்கிற கலிபோர்னியா கூட்ட குழுவினருக்காக நான் - நான் நிச்சயமாகவே நன்றியுள்ளவனா யிருக்கிறேன். என்னுடைய திடமான நம்பிக்கைகளை நான் பேசவில்லை யென்றால், நான் ஒரு மாய்மாலக்காரனாய் இருக்கிறேன். இப்பொழுது நான் உங்களோடு நேர்மையாயுங்கூட இருக்கவில்லை. நான் உங்களோடு நேர்மையாயிருக்க முடியவில்லையென்றால், நான் எப்படி தேவனோடு நேர்மையாயிருப்பேன். ஏனென்றால் நான் உங்களைக் காண்கிறேன், உங்களிடத்திலே பேசுகிறேன். உண்மையிலேயே நாம் தேவனிடத்திலும் கூட பேசுகிறோம். ஆனால் நாம் உண்மையாகவே ஒருவரோடொருவர் உத்தமமாயும், நேர்மையாயும் இருக்க வேண்டும். நாம் நிச்சயமாகவே ஒரு - ஒரு பயங்கரமான, பயங்கரமான காலத்தில் இருக்கிறோம். நீங்கள் எப்பொழுதாவது நிறுத்தினீர்களா ......... 25வெறுமனே நான் உங்களுக்கு ஒரு சிறு ஆய்வை சற்று கொடுக்கட்டும். ''என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே அதற்குள்ளாக பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவர்கள் எல்லோரும் அதில் பிரவேசிப்ப தில்லை“. இயேசு பூமியிலிருந்தபோது, ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்றார். ஒவ்வொரு வார்த்தையினாலுமே! அப்படியே இடையிடையே என்றல்ல, ஒரு வார்த்தையினால் என்றல்ல, ஆனால் ஒவ்வொரு வார்த்தையினாலுமே. தேவனுடைய ......... தேவனுடைய கட்டளைகளில் ஒரு வார்த்தை அவிசுவாசிக்கப்பட்டது, அதுவே மரணத்திற்கும், துக்கத்திற்கும், ஒவ்வொரு வியாதிக்கும் மற்றும் மனநோய்க்கும் காரணமானது, தேவனுடைய வார்த்தையில் ஒரு வார்த்தை தவறுவதே! அவன் மானிட வர்க்கத்தை மரணத்திற்குள்ளாக கொண்டு சென்றது தவறினதினாலே, ஒரு வார்த்தையை அவிசுவாசத்தினாலே, ''நிச்சயமாக'', நிச்சயமாகவே. ஆனால் அது சம்பவிக்கும் என்று அவர் கூறினார். சாத்தானோ ''நிச்சயமாகவே அது சம்பவிக்காது“ என்றான். ஆனால் அது சம்பவித்தது. ஆகையால் நாம் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் காத்துக்கொள்ள வேண்டும். ஒரு வார்த்தையை அவிசுவாசத்தினால் அல்லது தவறாக அர்த்தங்கொண்டதினாலே இந்த மானிடத்துக்குரிய, இந்த எல்லா பாடுகளும் மற்றும் மானிட வர்க்கத்திற்கு நேரிட்ட காரியங்களுமேயென்றால், அதனுடைய கிரயமான இந்த முழு மதிப்பு அவருடைய குமாரனின் ஜீவனாயிருந்ததேயானால், ஒன்றை விட்டு விடுவதினால் நாம் எப்படி திரும்பிச் செல்வோம்? ....... அழைக்கப்பட்டவர்கள் அநேகர், ........ தெரிந்து கொள்ளப் பட்டவர்களோ சிலர். ....... அழைக்கப்பட்டவர்கள் அநேகர், ....... தெரிந்து கொள்ளப் பட்டவர்களோ சிலர். 26நான் இதிலிருந்து ஒரு பொருளை எடுக்க முடியாது, காரணம் நமக்கோ நேரமில்லை, ஆனால் சரியாக ஏதோ ஒன்றை உங்களோடு விட்டுச் செல்கிறேன். அதைக் குறித்து நாம் சிந்திப்போமாக............. நான் ஒரு நாள் சகோதரன் ஷக்கேரியனுடன் சென்றேன், அங்கே அவர்கள் கால்நடைகளை இனக்கலப்பு செய்து கொண்டிருந்தனர். சகோதரன் ஷக்கேரியன் என்னை அங்கே உள்ளே கொண்டு சென்ற அந்த ... அந்த ஆய்வுக்கூடத்தில் நான் கண்டேன். அவர்கள் ஆண் பசுவின் விந்தில் வெறுமனே ஒரு சிறிய ...... ஒரு சிறிய கருவியைப் போன்ற ஒரு தீக்குச்சித்தண்டை தோய்த்து, அந்த ஒரு சொட்டு (Bunch) விந்தை எடுத்து, அதை ஆயிரம் மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிற இந்தக் கண்ணாடிக்கு கீழே அதை வைத்தனர். அந்த விந்தில், அதில் சிறு விந்தணுக்கள் குதித்துக் கொண்டிருந்தன. ஆணிடத்திலிருந்து விந்தணு வும், பெண்ணிடமிருந்து முட்டையும் வருகிறதென்று நாம் அறிவோம். நான் அங்கே அந்த வேதியியல் வல்லுநரைக் கேட்டேன், நான், “அதைப்போன்று அதை சிறிது குதிக்கச் செய்கிறது எது?” என்றேன். அவர், “அதில் - அதிலிருக்கிற சிறிய காளைகளும், கன்றுக் குட்டிகளும்” என்றார். புரிகின்றதா? நான், “அந்த சிறு சொட்டிலா?” என்றேன். அவர், “ஆம்” என்றார். நான், “ஒருவேளை அப்பொழுது இந்த முழு விந்திலும் அங்கே அவைகள் பத்து லட்சம் இருக்குமா?” என்றேன். அவர், “ஓ, ஆம்” என்றார். புரிகின்றதா? நான் மிகவும் கூர்ந்து கவனித்தேன். 27இப்பொழுது இந்த மகத்தான காரியம் சம்பவிக்கிறபொழுது, அங்கே அந்த பத்து இலட்சத்தில் ஒரு விந்தணுவிற்காக ஒரு முட்டையே காத்துக் கொண்டிருக்கிறது. அது எந்த விந்தணு என்றோ அல்லது எந்த முட்டை என்றோ எவருமே சொல்லமுடியாது. நீங்கள் இயற்கையான பிறப்பைக் கவனித்தால், அது கன்னிப்பிறப்பை விட ......... இரகசிய மானதாய் இருக்கிறது. ஏனென்றால் இந்த விந்தில், அங்கே அதில் ஒன்றுதான் ஜீவிக்கும்படியாக முன்குறிக்கப்பட்டிருக்கிறது, அவைகளில் மற்றவை மரித்து விடும். அது முதலாவதாக சந்திக்கின்ற ஒன்றல்ல; அது முதலாவது முட்டையோடு சேர வருகிற ஒன்றாயிருக்கிறது. ஒருக்கால் முட்டையானது விந்தின் பின்னாலிருந்து, அல்லது விந்தின் மையத்திலிருந்து எழும்பலாம்; விந்தணுவும் அதையே செய்யலாம், முட்டையும் அவ்வாறே செய்யலாம். அந்த விந்தணு முட்டைக்குள்ளாக ஊர்ந்து செல்கிறது, அதனுடைய சிறிய வால் போன்ற பகுதி மறைந்து விடுகிறது, அங்கே முதுகுத்தண்டு வளரத் துவங்குகிறது. அந்த முழுக் கூட்டத்திலுமே ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது, பத்து இலட்சத்தில் அதைச் செய்யப் போகிறது ஒன்றே ஒன்று; அது அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு வலிமையினால் மனிதனுக்கு தீர்மானிக்கப்படுகிறது. அதே சமயத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றீர்கள். அந்த விந்தணுக்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. மிருகங்களிலும் அதே காரியம் தான். மனிதனிலும் அதே காரியம்தான். இது பையனாகவோ, பெண்ணாகவோ, சிவப்புத்தலையாகவோ, கருப்புத்தலையாகவோ, அல்லது என்னவாக இருக்கப்போகிறது என்று தீர்மானிக்கப்படுகிறது. இது தேவனால் தீர்மானிக்கப்படுகிறது. இயற்கையாகவே அவைகள் யாவுமே ஒரே மாதிரியாகக் காணப் படுகின்றன. ஆனால் அங்கே ஜீவனுக்கென்று ஒன்றுதான் நியமிக்கப் பட்டிருக்கிறது; அவைகள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் பத்து லட்சத்தில் ஒன்றுதான். 28இஸ்ரவேலர் எகிப்தை விட்டுச் சென்றபோது, அங்கே ஒரே நேரத்தில் ஏறக்குறைய சரியாக இருபது லட்சம் ஜனங்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தீர்க்கதரிசியின் செய்தியைக் கேட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் அக்கினிஸ்தம்பத்தைக் கண்டனர். அவர்கள் ஒவ்வொரும் மோசேக்குள்ளாக சிவந்த சமுத்திரத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், மோசே ஆவியில் பாடினபோது, மிரியாமோடு கரையில் மேலும் கீழுமாக ஓடி தம்புரு வாசித்து, ஆவியில் கூச்சலிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே ஞானக்கன்மலையிலிருந்தே குடித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரவும் புதிதான மன்னாவையே புசித்தனர். அவர்கள் ஒவ்வொருவருமே! ஆனால் அந்த தேசத்தை இருவரே அடைந்தனர், பத்து லட்சத்தில் ஒருவர். சோதனை என்னவாயிருந்தது? அவர்கள் யாவரும் ஒரே கன்மலையில் குடித்தனர். அவர்கள் யாவரும் இந்தக் காலையில் நாம் புசித்துக் கொண்டிருப்பது போன்றே ஒரே ஞானமன்னாவை புசித்தனர், ஆனால் வார்த்தையின் சோதனை அவர்களை நிரூபித்தது. காதேஸ் பர்னேயாவின் நேரத்தண்டை வந்தபோது, அவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளாக செல்லத்துவங்கின் போது, அவர்கள் வார்த்தையினால் சோதிக்கப்படும் வரையில் அவர்களால் கடந்து செல்ல முடியவில்லை. மற்ற பத்துப்பேரும் திரும்பி வந்து, “நாம் அதை ஜெயித்துக் கொள்ள முடியாதே! ஜனங்களோ ... நாங்கள் அவர்களுக்கு வெட்டுக்கிளிகளைப் போல இருக்கிறோம். அவர்களுக்கு பெரிய அரணிப்பான பட்டணங்கள் இருக்கின்றன. எதிர்ப்போ மிகவும் பலமாய் இருக்கிறது” என்றனர். ஆனால் யோசுவாவும், காலேபும் ஜனங்களை அமர்த்தினர். அவர்கள், ''நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாமே!'' என்றனர். ஏன்? அவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை விட்டுச் செல்லும் முன்பே, தேவன், “நான் அந்த தேசத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். நான் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அது உங்களுடையது” என்றார். ஆனால் அங்கேயோ ஒவ்வொரு பத்து லட்சத்திலும் ஒருவர்தான் இருந்தனர். 29இன்றைக்கு உலகத்தில் ஏறக்குறைய சரியாக ஐநூறு கோடி பேர் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு சந்ததியை முற்றுப் பெறச் செய்கிறது. இப்பொழுது என்னவெனில், இன்றைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமானால், உலகம் முழுவதிலுமே ஐநூறு பேர்தான் எடுத்துக் கொள்ளப் படுவார்களானால் என்னவாகும்? அவர்கள் செல்வதைக் குறித்து நீங்கள் ஒருபோதும் அறிந்து கொள்ளவோ அல்லது செய்தித்தாளிலும் கூட காண மாட்டீர்கள். கர்த்தருடைய வருகையோ ஒரு இரகசிய வருகையால் இருக்கிறது. அவர் வந்து களவாடிச் சென்று விடுவார். அது அத்தகைய ஒரு சிறுபான்மையான எண்ணிக்கையாயிருக்கும், அதுவரையில் இது சீஷர்கள் இயேசுவை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்ட நாட்களில் இருந்ததைப் போன்றே அப்படியே இருக்கிறது. அவர், “அவன் ஏற்கனவே வந்தாயிற்று, நீங்கள் அதை அறிந்து கொள்ளவேயில்லை” என்றார். ஜனங்கள் என்ன செய்தனர் என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? அவர்கள் தொடர்ந்து மோசே ........ எலியா வரப்போகிறான் என்றே விசுவாசித்துக்கொண்டிருந்தனர். அவனோ சரியாக அவர்கள் மத்தியில் இருந்தான். அவர்கள் அதை அறிந்து கொள்ளவில்லை. மனுஷ குமார னுடைய வருகையும் அவ்வண்ணமாகவே இருக்கு மே ! அவர்கள் சரியாக அதே காரியத்தை அவரோடு செய்கிறார்கள். தேவ ஆவியானது இங்கிருக்கிறது. நல்லது, நாம் அதனோடு என்ன செய்யப் போகிறோம்? நாம் மன்னாவைப் புசித்து, நாம் வளர்ச்சியடைந்து, தொடர்ந்து முன்னேறிச் செல்லப் போவதில்லையா? 30சற்று நேரத்திற்கு முன்பு எப்படி ஒரு விதையானது நிலத்திற் குள்ளாகச் செல்கிறது என்பதை சங்கை பிட்ஸ் (Pitts) பேசிக் கொண்டிருந்தது போன்று, நீங்கள் எப்பொழுதாவது ஒரு விதையை கவனித்திருக்கிறீர்களா? அநேக விதைகள் அங்கே நிலத்திற்குள்ளாக இருக்கின்றன. தேவன் ஜலத்தின் மேல் அசைவாடினபோது, வெளிச்சமானது, வெளிச்சம் உண்டானது. முதலாவதாக, தேவனுடைய சமூகத்தில், தேவனுடைய வார்த்தையினால் உரைக்கப்பட்ட வெளிச்சம் உண்டானது. இன்னமும் வெளிச்சத்தைக் கொண்டு வருகிற ஒரே காரியம் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. விதையானது ஏற்கனவே பூமியில் இருந்தபோது, ஜலமானது பின்னிட்டு விலகினபோது, வித்தோடு அவைகளில் தரித்திருந்த விதைகள் தோன்ற வெளிச்சம் மட்டுமே உண்டானது. தேவன் தம்முடைய சிருஷ்டிப்பை உண்டாக்கினார். இப்பொழுது அங்கே உயிர்த்தெழுந்த காலையில் மற்றொரு வெளிச்சம் பூமியில் அடித்தது, அப்பொழுது பரிசுத்த ஆவியானது அருளப்பட்டது. அந்த தேவனுடைய வித்துக்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வர இது அருளப்பட்டிருக்கிறது. அவருடைய முன்னறிவினால், அது இங்கே பூமியின் மேலிருக்கும் என்று அறிந்திருந்தார். அவர் முதலாவது இயற்கையான வித்தை அறிந்திருந்தது போலவே ஆவிக்குரிய வித்தும் எங்கேயிருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். தேவன் முதலாவதாக பூமியை வாழ்விடமாக தோன்றச் செய்தபோது, அப்பொழுது உங்களுடைய சரீரமானது சரியாக பூமியின் மேல் இங்கே படுத்துக் கொண்டிருந்தது. நாம் பூமியின் ஒரு பகுதியாய் இருக்கிறோம். நாம் அங்கேயே படுத்துக்கொண்டிருந்தோம். அவர் தம்முடைய முன்னறி வினால் சரியாக யார் அவரை நேசிப்பார்கள் என்றும், யார் அவரை சேவிப்பார்கள் என்றும், யார் சேவிக்க மாட்டார்கள் என்றும் அறிந்திருந் தார். அவருடைய முன்னறிவு அதை கூறுகிறது. அது அவ்விதம் கூற வில்லையென்றால், அப்பொழுது அவர் தேவனல்ல. அவர் எல்லை யற்றவராய் இல்லாமல் தேவனாய் இருக்கமுடியாது. அவர் எல்லையற்ற வராய் இருப்பாரானால், அவர் எல்லாக் காரியங்களையுமே அறிந்து கொள்கிறார். 31ஆகையால், ஜனங்கள் தங்களுடைய அறியாமையினால் ஏற்படும் பெருந்தவறுகளை செய்கிறதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்கள் அதிலே இடறி விழுகிறார்கள். அவர்கள் அதிலேயே ஓடுகிறார்கள், அவர்கள் இதையும் அதையும் சிந்திக்கிறார்கள், ஆனால் அது சரியாக கிரியை செய்கிறதில்லை, நாம் அதைக் காண்கிறோம். ஆனால் ஒரு சரியான செயல் உண்டு, அது தேவன் உங்களை என்னத்திற்காக அழைத்தார் என்ற தேவனுடைய பரிபூரண சித்தத்தைக் கண்டறிந்து அதில் நிற்பதேயாகும். சகோதரன் ஜேக் (Jack) இங்கே கீழே பெரிசியன் ஸ்கொயரி லிருந்ததைக் (Persian Square) குறித்து கூறினது போலவே எல்லாமே குழப்பம் தான், ஒன்றிற்கு இது ஒரு வழியாயும், ஒன்றிற்கு அது வழியாயும் இருக்கிறது; வேத பண்டிதர்களைக் குறித்து, மற்றும் நீங்கள் சிறிது வேத சாஸ்திரம் போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பினால் அங்கே கீழே செல்லுங்கள். இது லண்டனிலுள்ள ஹைடி (Hyde) பூங்காவில் இருக்கின்றதைப் போலவே, கிட்டத்தட்ட அது அதைப்போன்றே தான் என்று நான் யூகிக்கிறேன். நான் அங்கிருந்தேன், ஒவ்வொருவருமே தங்களுடைய சொந்தக் கருத்தை உடையவர்களாக இருக்கின்றனர். இது- இது ஒரு பாபிலோனிலுள்ள ஒரு உலக நவீன நாளின் கதம்ப கூளமாயிருக்கிறது. 32ஆனால் சகோதரன் பிட்ஸ் (Pitts) இந்தக் காலையில் நமக்கு அவருடைய மகிழ்ச்சியூட்டுகின்ற செய்தியைத் தொடர்ந்து நிகழ்த்துகை யில் நீங்கள் கவனித்தீர்களா? அவர் அந்தப் பூங்காவை விட்டு நடக்கத் துவங்கினபோது அங்கு ஒரு சிறிய ஈஸ்டர் லீலிப்புஷ்பத்தைக் கண்டாராம். அவர் இதை நமக்கு கொண்டு வந்தது போல, ''எல்லாக் குழப்பத்திற்கும் மத்தியில்“ அது, 'ஆம்' அல்லது 'இல்லை ' என்று கூற வழியே இல்லாமல் இருந்ததாம். எல்லாக் குழப்பத்திற்கும் மத்தியில் அதில் ஒரு தேவனுடைய ஜீவன் பிரகாசித்துக் கொண்டிருந்ததாம். அது தன்னுடைய பிரகாசத்தில் அங்கிருந்ததாம். ஏனென்றால் அது அங்கிருக்க வேண்டுமென்று தேவன் நியமித்திருந்தாராம். எல்லாப் போராட்டத்திற்கும் மத்தியில் எவருமே அதைக் கவனித்துக் கொண்டிருக்கவில்லையாம். அவர்கள் அதனுடைய ஆவிக்குரிய விண்ணப்பத்தை காணவில்லையாம். இன்றைக்கு நம்முடைய பெரிய கூட்டங்கள், குழுக்கள், சபைகள், ஸ்தாபனங்கள் போன்ற எல்லாவற்றின் மத்தியிலும், இது அவ்வண்ணமாக இருக்கிறது. ஒருவர் இந்தவிதமாய், “நாம் பாப்டிஸ்டுகளாய் இருக்க வேண்டும் அல்லது பிரஸ்பிடேரியன்களாய் இருக்க வேண்டும். இந்தவிதமாய், அந்தவிதமாய் அல்லது மற்றதாய் இருக்க வேண்டும்” என்ற இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாவற்றின் மத்தியிலும் ஒரு மலர் வளர்ந்துகொண்டிருக்கிறது. தேவனுடைய வல்லமை யானது சரியாக நமக்கு மத்தியில் நம் எல்லோருடைய மத்தியிலும் எழுப்பப்பட்டிருக்கிறது. நாம் சற்று நிறுத்தி, ஒரு சில நிமிடங்கள் அதை நோக்குவோமாக. இந்த வாரம் அதை கவனித்து, அது சரியாக நமக்கு முன்பாக வெளிப்படுவதை காண்போமாக, தேவன் அதைச் செய்வார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? (சபையார், “ஆமென்” என்கிறார்கள் - ஆசி.] 33நாம் இப்பொழுதே உடனடியாக அடித்தளத்தில் இருக்க வேண்டும் என்பதை நான் இப்பொழுது புரிந்து கொண்டேன். ஆகையால் நம்மில் ஒவ்வொருவரும் ஜெபம் செய்வோமாக. அன்புள்ள தேவனே, நாங்கள் உம்முடைய சமூகத்தில் எங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாங்கள் கேட்பதற்கு மிகவும் குறைவுள்ளவர்களாகவே இருக்கிறோம் என்பதை நாங்கள் உணருகிறோம். ஆனால் நாங்கள் வருவோமானால், நீர் எங்களை புறம்பே தள்ளமாட்டீர் என்று நீர் எங்களுக்கு வாக்களித்தீர். இந்த திடுக்கிடப்படுகின்ற வாக்குமூலங்கள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கோட்பாடாய் இருக்க வேண்டும் என்று அல்ல, பத்து லட்சத்தில் ஒன்று, ஆனால் ஒருவிதமாய் நினைவில் வைத்துக் கொள்ளவே. ஏனென்றால் நீர், ...... ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமா யிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப் பட்டவர்களோ சிலர், என்றீர். ஓ, நித்திய பிதாவே, இந்த வருகின்ற வார விசேஷித்த கூட்டத்தின் மூலமாக, இந்த பட்டணத்தின் ஊடாக சுவிசேஷ வெளிச்சத்தை அனுப்பும். ஏதாவது வித்து அங்கே இருக்குமானால், ஆண் பெண் விந்தணுவில் அதை விளக்கிக் காட்ட முயற்சித்தது போல, எப்படியாவது உம்முடைய சொந்த மகத்தான முன்னறிவின் ஞானத்தால் அவைகள் இந்த விசேஷித்த கூட்டத்திற்குள்ளாக உருளுவதாக. பரிசுத்த ஆவியானவர் அவைகளுக்கு வெளிச்சங் கொடுப்பாராக. நேரமானது நாங்கள் அதை நினைப்பதைக் காட்டிலும் ஒருவேளை கால தாமதமாகி விட்டது என்றே நாங்கள் உணருகிறோம். தேவனே, நாங்கள் இங்கே வந்திருக்கின்ற காரணத்தால் ஜனங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஏதோ ஒன்று இங்கே உண்டாயிருக்கலாம் அல்லது - அல்லது கடைசி ஆடு பிடிக்கப்படலாம் என்றே விசுவாசித்து நாங்கள் ஜெபிக்கிறோம். ஆட்டுத் தொழுவம் நிறைகின்றபொழுது, அப்பொழுது மேய்ப்பனானவர் வந்து வாசலை மூடுவார் என்பதை அறிந்திருக்கிறோம். 34அது நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, குடும்பத்தின் கடைசி அங்கத்தினர் உள்ளே கொண்டுவரப்பட்டபோது, தேவன் வாசலை அடைத்தார். அவர்கள் அடித்தார்கள், இடித்தார்கள், ஆனால் அதுவோ மிகவும் காலதாமதமானதாய் இருந்தது. அன்புள்ள தேவனே, அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. நீர், “நானே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல்” என்றீர். 'தொண்ணூற்றொன்பதும் உமக்கு போதுமானதல்லவா? ஆனாலும், அப்படியில்லாமல் இன்னுமொன்றும் இருந்ததே“ என்று புலவனிடமிருந்து தோன்றின் அந்தப் பாடல் எவ்வளவு கருத்தானதாய் தென்படுகிறது. அவன் ஒரு சிறு கருப்பாடாய் இருக்கலாம், அல்லது அவன் ஒன்றுமற்ற ஒரு அற்பமானவனாய் இருக்கலாம், சிறிய அவளாகவோ அல்லது அவனாகவோ இருக்கலாம். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறியோம், ஆனால் கடைசி ஒன்று உள்ளே வரவேண்டும், அப்பொழுதே வாசல் அடைக்கப்படும். ஓ, தேவனே, எல்லாக் காரியங்களையும் அறிந்துள்ளவரே, இந்தக் காலையில் எங்களுடைய ஜீவியங்களை சோதித்தறியும், அதாவது வாசல் அடைக்கப்பட்டு, மேய்ப்பரானவர் அந்த ஆட்டோடு உள்ளே இருக்கும் படியான அந்த கடைசி ஒன்றை நாங்கள் கண்டுபிடிக்கும்படியாக, நாங்கள் எங்கெல்லாம் போகக் கூடுமோ அங்கெல்லாம் எங்களை அனுப்பும். இதை அருளும் கர்த்தாவே. அந்த ஒன்று இங்கே இன்றைக்கு இங்கிருக்குமானால், அந்த ஒன்று உள்ளே வரவேண்டியதாய் இருக்குமானால் ....... ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;“ 35ஒரு இழுபறியாயோ அல்லது ஒரு சிறு உணர்வாயிருந்தாலும், இங்கோ அல்லது அடித்தளங்களிலோ இந்தக் கூட்டத்தில் இங்கே யிருக்கின்ற யாரோ ஒருவருக்கான வேளையாய் இது இருக்கலாம், அல்லது அவர்கள் எங்கேயிருந்தாலும் அவர்கள், “ஆம் கர்த்தாவே, தூரமாய் அலைந்து திரிந்துகொண்டிருந்த ஒன்று நான்தான்; என்னுடைய ஜீவியம் முழுவதுமே இதை எதிர்க்க முயன்று போராடியிருக்கிறேன். நான்- நான் - நான் வரவேண்டும் என்பதை நான் உணர்ந்தேன், ஆனால் இன்றைக்கோ நான் தோல்வியின் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருக் கிறேன். நான் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்ல முடியாது. நான் எந்த வழியிலும் செல்ல முடியாது” என்று பதில் கூறுவார்களாக. ஓ, பிரதான மேய்ப்பனானவர் வந்து, மென்மையான கரங்களினால் தொட்டு, பாதுகாப்பாய் உள்ளே கொண்டுவருகிற அந்த ஒன்றை தன்னுடைய தோள்களின் மீது அதை வைத்து, அதை மீண்டுமாக பாதுகாப்பாகவே கொண்டு செல்வாராக. கர்த்தாவே, வியாதியாய், ஒருவிதமான நிலையில், மருத்துவர், ''ஒன்றுமே செய்ய முடியாது“ என்று கூறின ஒருவர் இங்கிருக்கலாம். அவர் அதை விடுவிக்க கடினமாக முயன்றார், ஆனால் அவர் அதை விடுவிக்க முடியாமற் போயிற்று. அது அவருடைய செயல் வரம்பிற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. அவர் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை. அவருடைய மருந்தோ அல்லது கத்தியோ அதற்குப் பலனைத் தர முடியாது. ஆனால், ஓ, கர்த்தாவே, உம்முடைய மகத்தான புயத்திற்கு மிகவும் தூரமானது ஒன்றுமேயில்லை, உம்முடைய வார்த்தையே உம்முடைய புயமாய் இருக்கிறது. ஆகையால் அன்புள்ள தேவனே, இந்தக் காலையில் நாங்கள் உம்மண்டை பேசிக் கொண்டிருக்கையில், மருத்துவரிடமிருந்து தூரமாயும், விஞ்ஞான காரியங்களின் எல்லை எல்லாவற்றிற்கும் புறம்பாயும், தானாய் உதவி செய்து கொள்ள முடியாமல் வியாதியாய் இருக்கிறவர்களை நீர் கரம் நீட்டி தேர்ந்தெடுக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் சுகமாக்கப்படுவார்களாக. இதை அருளும் கர்த்தாவே. 36நாங்கள் தாவீதைக் குறித்து சிந்திக்கையில், அவனுக்கு வெறுமனே ஒரு சில, ஒரு சில ஆடுகளை கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் ஒரு கரடி உள்ளே வந்து, ஒரு சிறிய ஆட்டைப் பிடித்து, அதை வெளியே கொண்டு சென்று விட்டது. அதை (ஒரு சரீரத்தை ஒரு புற்றுநோய் தின்று விடுவது போல) தின்று விட்டிருக்கும், அல்லது பெரிய சிங்கம் அதை தின்று விட்டிருக்கும். ஆனால் தாவீதோ ஒரு துப்பாக்கியை மிக நல்ல கருவியாய் கொண்டிராமல் அல்லது ஒரு வாட்போர் வீரனாயில்லாமல், ஒரு கவணோடு மட்டுமே அவன் அந்த ஆட்டைப் பின்தொடர்ந்து சென்றான். அவன் அந்த சிறிய ஆட்டை கிட்டத்தட்ட கொல்லவிருந்த அந்த அந்த மிருகத்தைக் கண்டபோது அவன் அந்த கவணினால் அதைக் கொன்றான். ஒரு தோல் துண்டினாலும், ஒரு வாரினாலுமான வெறுமனே ஒரு சாதாரண சிறு ஆயுதம், ஆனால் அவன் அதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தான். கர்த்தாவே, நாங்கள் எங்கள் மத்தியில் மகத்தான மேதைகளைக் கொண்டவர்களாய் இருக்கவில்லை. நாங்களோ ஒரு சாதாரண சிறு ஜெபத்தோடிருக்கிற ஜனங்களாகவே இருக்கிறோம். ஆனால் நாங்கள் இந்தக் காலையில் தகப்பனுடைய ஆட்டைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம். வீதிகளில் நடந்து கொண்டிருக்கின்ற அந்த ஸ்திரீ பரிதபிக்கப்படத்தக்கவளாய், சிகரெட்டுகளை புகைத்துக் கொண்டு, அந்த சிகரெட்டின் மூலமாக சமாதானத்தைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்; அந்தக் கண்ணாடிக் குவளை பானத்தை நுகர்ந்த பார்த்த அந்த மனிதன் அதை நிறுத்தும்படி முயற்சித்தான், ஆனா சத்துருவோ அவனை இறுகப்பற்றிக் கொள்கிறான்; அந்தப் பையரே அல்லது பெண்ணோ சரியானதை செய்யவே முயற்சித்தனர், அதாவது அந்த தவறான காரியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான பெலத்தை சரியாக கண்டறிய முடியவில்லை; நாங்கள் இந்தக் காலையில் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அந்த ஆட்டிற்காக உரிமை கோரும் படியாக வருகிறோம். நாங்கள் சத்துருவிற்கு அறைகூவல் விடுகிறோம்; காரணம் அது ஒரு சாதாரண காரியமாய், ஒரு கவணாய், ஒரு ஜெபமாய் இருக்கிறது, ஆனால் எங்களுடைய கரங்களுக்கு பொறுப்பாய் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற அந்தக் காரியங்களைக் குறித்து நாங்கள் கணக்கொப்புவிக்கும்படியாக, பிதாவினுடைய தொழுவத்திற்கு அந்த ஒன்றை திரும்பக் கொண்டு வருவதற்கு நாங்கள் வந்து கொண்டிருக்கின் றோம். இப்பொழுது தேவனுடைய வல்லமையானது ஜனங்களுடைய இருதயங்களிலுள்ள ஆழமான விசுவாசத்தை சென்றடைவதாக, இந்தக் காலையில் அந்த இழந்துபோன ஆத்துமா திரும்புவதாக. இந்த ஜீவியத்தின் சோதனைகள் அவைகள் அணுகாமல் தடுக்கப்படுவதாக, அவன் செல்வானாக. அவன் எஜமானுடைய தோள்களின் மேல் தான் பாதுகாப்பாயிருப்பதைக் கண்டடைந்து மீண்டும் பாதுகாப்பிற்கு திரும்பக் கொண்டு செல்லப்படுவானாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். தேவன் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை நாளை காணும் வரையில், நான் ஆராதனையை சகோதரன் ஷக்காரியனிடம் ஒப்படைக்கவுள்ளேன். (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.) (சகோதரன் பிரான்ஹாம் மூன்றாம் பாகத்தை முடிக்கிறார் - ஆசி.) 3779: நான் தவறாயிருந்த ஏதோ ஒன்றை உங்களுக்காக கூறவே இங்கு நிற்பேன் என்று விசுவாசிக்கும்படியாக நான் உங்களுக்கு முன்பாகவும், தேவனுடைய பார்வையிலும் அதிகமான கிருபையை பெற்றிருக்கிறேன் என்பதை நீங்கள் .......... அறிந்து கொள்வீர்கள் என்று நான் - நான் நம்புகிறேன். நான் என்னுடைய ஐம்பத்தி ஆறாவது பிறந்த நாளை அன்றொரு நாள் கடந்து விட்டேன். இது வெறுமனே ஒரு வயோதிப மனிதனுடைய செய்தியல்ல. நான் ஒரு சிறு பையனாய் இருந்தது முதற் கொண்டே நான் இதை விசுவாசித்து வருகிறேன். இது உண்மையல்ல வென்றால், தேவனுக்கு பூமியின் மேலிருந்தவர்களிலேயே மிகவும் முட்டாள்தனமாக நபராய் நான் இருந்து வருகிறேன். நான் இந்த காரணத்திற்காகவே என்னுடைய முழு ஜீவியத்தையும் கொடுத்திருக்கிறேன். மேலும் நான் இதை உத்தமத்தோடு கூறுவேனாக; நான் பத்தாயிரம் ஜீவியங்களை உடையவனாக இருந்தாலும், நான் என்னுடைய அபிப்பிராயத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே மாட்டேன். இப்பொழுது சுகமளித்தல் ஒவ்வொரு நபரின் வாய்ப்பெல்லை யிலும் இருக்கிறது. நினைவிருக்கட்டும், சுகமளித்தல் உங்களுக். குள்ளாகவே இருக்கிறது. தேவன் பீச் மரத்தில் ஒவ்வொரு பீச் பழமும் அதில் எப்பொழுதுமே அதற்குள்ளாகவே இருக்கும்படியாகவே வைத்து அவர் அதை தோட்டத்தில் நட்டார். பாருங்கள், நீங்கள் வெறுமனே ........ பீச் மரமானாலும் அல்லது ஆப்பிள் மரமானாலும் அல்லது எந்த கனி மரமானாலும் பூமியிலுள்ள நீரைக் குடித்தே வளர வேண்டியதாயிருக்கிறது. இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவருமே உங்களுக்கு வழங்கும்படியான அந்த உள்ளார்ந்த ஆற்றல்களை உங்களுக்குள்ளாகவே உடையவர்களாய் இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் ஞானஸ்நானத் தினால் (தண்ணீர் ஞானஸ்நானத்தினால் அல்ல) ஆவிக்குரிய ஞான ஸ்நானத்தினாலே கிறிஸ்துவுக்குள்ளாக நடப்பட்டது முதற்கொண்டே அது தேவனாய் இருக்கிறது. நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தினால் கிறிஸ்து வுக்குள்ளாக வருகிறதில்லை. ஆவிக்குரிய ஞானஸ்நானத்திலேயே! கர்த்தருக்குச் சித்தமானால், நாளை பிற்பகல், நான் அதனுடைய உண்மையான செயல்முறை என்னவென்றும், எப்படியென்றும் அதன் பேரில் பேசப் போகிறேன். நாம் அதை பிற்பகலில் வைத்துக் கொள்ளப் போகிறோம், எனவே அது உங்களுடைய ஆராதனைகள் எதனோடும் இடையிட்டு தடை செய்யாது. 38இப்பொழுது பாருங்கள், விசுவாசிகள் என்ற காரணத்தால், நீங்கள் ஒவ்வொருவரும் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள், பாருங்கள், ஆகையால் கிறிஸ்துவுக்குள்ளிருந்த ஜீவன் உங்களுக்குள்ளாக இருக்கிறது. நீங்கள் அதை சரியாக காணக்கூடுமானால், அதை காணக்கூடுமே! இது அதிலிருந்து உங்களை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிற பிசாசினுடைய வேலையாய் இருக்கிறது, உங்களை குருட்டுத்தனமாக்கி வைத்திருக்கிறது. அவர் உங்களை குருடானவர்களாயிருக்க அனுமதிக்க முடியும், அதாவது பாருங்கள், அப்பொழுது நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதையே நீங்கள் அறிந்துகொள்கிறதில்லை. குருடாயிருக்கிற ஒரு மனிதன் அவன் எங்கே போய்க்கொண்டிருக்கி றான் என்பதை கூறமுடியாது, அவன் காணக்கூடிய யாரோ ஒருவரிடம் மிருந்தே தெரிந்துகொள்ளும் உணர்வைத் தேட வேண்டியவனாய் இருக்கிறான். நாம் புரிந்து கொள்ள முடிகின்ற வரையிலும் யாரோ ஒருவர் நமக்கு சத்தியம் என்னவென்பதை கூறவேண்டியதாய் இருக்கிறது. கிறிஸ்து உங்களுக்காக மரித்தார், நீங்கள் உலகத்திலிருந்து கிறிஸ்துவுக்குள்ளாக எடுத்து நடப்பட்டிருக்கின்றீர்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் உங்களுக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும் சரியாக உங்களுக்குள்ளாகவே இருக்கிறது. அது சரிதானே? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அப்படியே அதிலிருந்து பருகத் தொடங்குவதாகும். 39மரமானது நீரை உட்கொள்கின்ற காரணத்தால், அது தன்னுடைய இலைகளை அதனுடைய இளந்தளிர்களை வெளியே கொண்டுவரத் துவங்குகிறது, ஒவ்வொரு வருடமும் அதனுடைய கனிகளை வெளிக்கொண்டு வருகிறது. கனியானது நிலத்தில் இல்லை; கனி மரத்தில் இருக்கிறது. அதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? ''ஆமென்“ என்று கூறுங்கள். [சபையோர், 'ஆமென்” என்கிறார்கள் - ஆசி.) ஆகையால் பாருங்கள், கனியானது மரத்தில் இருக்கிறது. ஒவ்வொரு மரமும் தன்னுடைய ஊற்றிலிருந்து நீரை உட்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. மழையானது கீழே பொழிகிறபடியால் அது மரத்திற்கு ஜீவனைக் கொடுத்து அதினின்று பருகச் செய்கிறது. அது நீரை உட்கொள்கிறபடியால் அது வளருகிறது. சபையானது இந்தக் காலத்தில் வெளியே மலர்ச்சியடைய வேண்டியதாயிருப்பது போன்றே அது முழுமையான முதிர்ந்த கருமுளையாய் ஆகத் தொடங்கும் வரையில் அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது. நாம் நீரை அருந்துகின்ற காரணத்தால் நாம் வளருகிறோம். ஆனால் செடியானது நீரை உட்கொள்வதற்கு மறுக்குமானால், அப்பொழுது அந்தச் செடியானது வளர முடியாது. நீங்கள் தனிப்பட்ட முறையில் இப்பொழுது இதை அப்படியே விசுவாசிப்பீர்களேயானால்! 40உண்மையிலேயே கூட்டங்களில் எப்படி கர்த்தர் செய்கிறார் என்பதையும், எப்படி வித்தியாசமான காரியங்களை காண்பிக்கிறார் என்பதையும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதைக் குறித்தும் நீங்கள் என்ன செய்திருக்கக்கூடாது போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் நின்றபடியால், பரிசுத்த ஆவியானவர் இப்படிப்பட்டதை செய்ய இந்த காலையில் நம்மீது விழுவார் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந் தோம். ஆனால் நான் தொடர்ந்து காத்துக் கொண்டிருந்தேன். இது நரம்புக் கோளாறான பகுதி என்று நான் நினைக்கிறேன், கீழ்த்தளங்களில் அவர்கள் இங்கிருந்து நாம் வெளியேற விரும்புகிறார்கள் என்று எண்ணுகிறேன். பாருங்கள், ஆனால் அவர்கள் நம்மை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்; இப்பொழுது நாம் உரிய நேரங்கடந்தேயுள்ளோம். ஆனால் உங்களுடைய முழு இருதயத்தோடு இதை விசுவாசியுங்கள். தயவு செய்து விசுவாசியுங்கள். நான் - நான் ஒரு உண்மையான நபர் என்று உங்களுடைய பார்வையில் கிருபை பெற்றிருந்தால் இதை விசுவாசியுங்கள். இப்பொழுது உங்களுடைய கரங்களை ஒருவர் மற்றொருவர் மீது - மீது வையுங்கள். இப்பொழுது பாருங்கள். இப்பொழுது, “வில்லியம் பிரான்ஹாமை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று வேதம் கூறவில்லை. “இது ஓரல் ராபர்ட்ஸை மட்டுமே பின்தொடரும்” என்று கூறவில்லை. ''இது சகோதரன் காப்பை (Kopp) பின்தொடரும்“ அல்லது யாரோ ஒருவரை என்று கூறவில்லை. “விசுவாசிக்கிறவர்களால்”, பன்மை “நடக்கும் அடையாளங் களாவன; அவர்கள் வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்களேயானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். அது உங்களுக்குள்ளிருக்கிற தேவனுடைய வல்லமையாய் இருக்கிறது, அது, அந்த நபரின் மீது நீங்கள் உங்களுடைய கரத்தை வைக்கும் பொழுது ஜீவனை, ஜீவனைக் கொடுக்கும் ஆதாரமான பரிசுத்த ஆவியைக் கொண்டு வருகிறது. 41அன்புள்ள தேவனே, இந்த தீர்வுக்குரிய நேரத்தில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சபையானது ....... அவர்கள் இந்த நொடியிலேயே நரம்புத்தளர்ச்சியற்றவர்களாய் நிற்பார்களாக, கல்லறையிலிருந்து கிறிஸ்துவை எழுப்பின வல்லமையானது, “அவர்கள் வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்களேயானால், அப்பொழுது அவர்கள் சொஸ்த மாவார்கள்” என்ற இயேசுவினுடைய கட்டளையான சுவிசேஷ சத்தியத்தில் இப்பொழுதே அவர்களை உயிர்ப்பிப்பதாக. ஒவ்வொரு பிசாசின் வல்லமையும், ஒவ்வொரு சுகவீனமும், ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு அல்லல்களும், ஜனங்களுக்கு நேரிட்டிருக்கிற ஒவ்வொரு சித்திரவதையான காரியமும் விசுவாசத்தினால் அது இப்பொழுதே நீங்கிப் போவதாக. ஜனங்கள் விசுவாசிக்கின்ற காரணத்தால், நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். அவர் இதைச் செய்கிறார் என்று நீங்கள் விசுவாசித்தால், இப்பொழுதே உங்களுடைய கரங்களை உயர்த்தி அவருக்கு துதி செலுத்துங்கள். அன்புள்ள தேவனே, கர்த்தாவே இது செய்யப்படவில்லை என்றா லொழிய இந்தக் குழந்தை மரித்து விடும். நான் இந்த சதை வீக்கத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன். அது இந்த மாசற்ற குழந்தையை விட்டு நீங்கிப் போவதாக. ஆமென். இப்பொழுது மருத்துவர்கள் முயற்சித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் தோல்வி கண்டனர். உறுதியாக விசுவாசியுங்கள்.